சுல்தான் திரைவிமர்சனம்.

sulthan mive review

சுல்தான் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். முதல் படமே வெற்றி படமாக அமைந்த இயக்குனரின் அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா சுல்தான் என்பதை வாருங்கள் பார்ப்போம்.

சுல்தான் படம் எப்படி இருக்கு

கார்த்தி சுற்றி ஒரே ரவுடிகள் கூட்டம் ரவுடிசம் நிறைந்த கதை போல இதில் என்ன சொல்லி இருக்க போகிறார்கள் என்று ட்ரெய்லரை பார்த்து தப்பாக நினைக்க வேண்டாம்.

100 பேர் அடியார்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு வீட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு தலைவனாக இருப்பவர் தான் நெப்போலியன். நெப்போலியன் மகன்தான் கார்த்திக் இவர் பிறந்த உடன் நெப்போலியனிடம் உள்ள அடியாட்கள் அனைவரும் அண்ணனைப் போலவும் தாய் மாமாவை போலும் கார்த்தியிடம் நடந்து கொள்கிறார்கள் அதன்பின் வெளிநாட்டில் வேலை செய்யும் கார்த்தி விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். நெப்போலியன் ஒரு கட்டத்தில் இறக்கிறார் அதன்பின் தன் தந்தையின் பொறுப்பில் இருந்து அந்த 100 பேரை வைத்து கார்த்தி என்ன செய்தார் என்பதுதான் மீதி கதை.

கார்த்தி வழக்கம் போல தனது அசால்ட்டான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். இடைவேளைக்கு முன் வரும் சண்டை காட்சி மாஸ்.

ராஷ்மிகா காதல் காட்சிகள் பெரிய அளவில் ரசிக்கும்படி இல்லை என்றாலும் ஓகே ரகம்.

படத்தின் நீளம் அதிகம் என்பதால் இயக்குனரும் எடிட்டரும் பல இடங்களில் கத்தரி போட்டு இருக்கலாமே என்று தோன்றுகிறது.

வழக்கமான கதை அதை எப்படி கமர்சியல் அடையாளங்களுடன் சொல்வது என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு சற்று அழுத்தம் கொடுத்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.

விவசாயிகளுக்காக போராடுவது போல பல படங்கள் தொடர்ந்து வந்தாலும் இந்தப்படத்தில் ரசிக்கும்படி கமர்சியல் ஏலமண்ட்ஸ் நிறைந்து இருந்ததால் படம் ஓகே என்று இருந்தது.

100 பேரை கூட்டமாக சேர்த்து படம் எடுத்துள்ளார்கள் போர் அடுக்குமா என்றால் அவர்களின் நடிப்பு தான் நம்மளை ரசிக்க வைக்கிறது.

படத்தின் பெரிய பிளஸ்

கார்த்தி நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.

பின்னணி இசை

படத்தின் மைனஸ்

பல இடங்களில் கத்தரி போடாமல் படத்தை ரிலீஸ் செய்தது.

OVERALL RATING

கார்த்தி விவசாயத்தைப் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்கு
பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சுல்தான் கெத்தாக நின்றாலும் கொத்தாக கவரவில்லை என்பதே உண்மை.

Movie Verdict: Okayish Movie

ரேட்டிங்: 2.5 /5