கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது கணவரை நினைத்து உருகும் டாக்டர் சேதுராமன் அவர்களின் மனைவி..!!! நீங்கள் எங்களுடன் தான் இருக்கீங்க..!!! கண்கலங்க வைக்கும் பதிவு.

dr sethuraman wife emotional post

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் டாக்டர் சேதுராமன், இவர் நடிகர் சந்தானத்திற்கு நெருங்கிய நண்பர் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்த சந்தானம் விரும்பினார் அதனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து சந்தானத்தின் சக்க போடு ராஜா வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்தார்.

போன வருடம் மார்ச் மாதம் 26 தேதி சேதுராமன் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். சேதுராமன் இறந்த செய்தி தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் மருத்துவர் அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒருவர் திடீரென்று சிறு வயதிலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேதுராமன் இறுதி அஞ்சலிக்கு நடிகர் சந்தானம் கூடவே இருந்து நண்பனை வழியனுப்பி வைத்தார். அவருடைய மனைவி உமா கணவர் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதார் இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

சேதுராமன் அவர்கள் இறந்த நேரத்தில் அவருடைய மனைவி உமா அவர்கள் கர்ப்பிணியாக இருந்தார். சேதுராமன் இறந்த ஆறு மாதங்களிலேயே அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதனை தன் கணவரை தனக்கு குழந்தையாக வந்து பிறந்து விட்டார் என்று எமோஷனலாக இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் உமா.

தற்பொழுது சேதுராமன் இறந்த நாளான இன்று அவரை நினைத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் அவரது அன்பு மனைவி அதில் நான் இதுவரை உங்களை பெயர் சொல்லி அழைத்ததில்லை மா என்று தான் அழைப்பேன். நான்கு வருடமாக உங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்தேன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை மட்டும் தான் நானும் சிந்தித்தேன். நீங்கள் கனவு கண்டதை ஒருபோதும் நிறுத்தியது இல்லை உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்ததில்லை. உங்களுக்கு நிகர் யாரும் இல்லை.

நமது மகன் மற்றும் மகள் வேதாந்த் (லிட்டில் யூ) & சஹானா வளர்ந்து கதவைத் தட்டும் வரை காத்திருப்பார்கள்.

நீங்கள் வெகு தொலைவில் இல்லை …. உங்களைக் கேட்கவோ பார்க்கவோ முடியாத அளவுக்கு அருகில் தான் இருக்கீர்கள் என்று உருக்கமான பதிவை தனது கணவரை நினைத்து பதிவிட்டு உள்ளார்.