vijay in master fdfs

தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக வந்து திரையரங்கில் பார்த்து ரசிப்பார்கள் கொரோனா காலகட்டம் என்பதால் அரசு 50 சதவீதம் இருக்கைக்கு மட்டுமே அனுமதி கொடுத்தது.

மாஸ்டர் திரைப்படம் வெளியிட்ட இடங்களில் ஒருவாரத்திற்கு டிக்கெட் முன்னதாகவே புக் ஆகிவிட்டது. குடும்பம் குடும்பமாய் மாஸ்டர் படத்தினை வந்து ரசித்து செல்கின்றனர் மக்கள்.

இந்தக் கூட்டத்தை காண தான் தியேட்டர் உரிமையாளர்களும் பல மாதங்களாக காத்திருந்தனர் இதற்கு முன் பல படங்கள் ரிலீஸ் ஆகியும் தியேட்டருக்கு வர தயங்கிய மக்கள் மாஸ்டர் படம் பார்க்க குடும்பத்துடன் வந்து செல்வது விஜய் என்ற ஒரு மனிதற்காக தான்.

மக்களை மறுபடியும் தியேட்டருக்கு அழைத்து வரும் மேஜிக் விஜயிடம் இருப்பதை புரிந்து கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் மாஸ்டரை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தனர்.

மாஸ்டர் முதல்நாளிலேயே 25 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில் கேப் ஒன்றை அணிந்து கொண்டு விஜய் மற்றும் அவரது மகள் தேவி தியேட்டரில் முதல் நாள் படம் பார்க்க அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து படம் பார்த்து உள்ளார். இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் ட்விட்டர் பிரபலம் ஒருவரை தாக்கி வருகின்றனர். ட்விட்டர் பிரபலம் ஒருவர் தைரியம் இருந்தால் விஜய் முதல் நாள் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க சொல்லுங்கள். இந்த நேரத்தில் என்று விமர்சித்து வந்தார் அவர் வர மாட்டார் என்றும் கூறியிருந்தார் தற்பொழுது இந்த வீடியோ வெளியானவுடன் ரசிகர்கள் அந்தத் ட்விட்டர் பிரபலத்தை தாக்கி வருகின்றனர்.