vijayakanth pongal wishes

கேப்டன் விஜயகாந்த் இவரைப் பற்றி கேட்டால் நல்ல மனிதன் என்று இவரைப் பற்றி புகழாதவர்கள் யாருமில்லை. தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகம் ஆன போது இவரை எப்படி மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் முகத்துக்கு நேராகவே ஒருசிலர் பேசினார்களாம்.

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று விஜயகாந்த் கண்ணெதிரே அந்த படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்தாராம் ஒரு தயாரிப்பாளர்.

பல அவமானங்களை சந்தித்து தன்னை மாற்றிக்கொண்டு சினிமாவிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து பல வெற்றிப்படங்களை தமிழ்சினிமாவில் கொடுத்த நடிகர். ஒரு நேரத்தில் இவருடைய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது முன்னணி நடிகர்களின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை போலவே இருக்கும்.

இவரெல்லாம் ஹீரோவா எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியவர்கள் முன்னே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் கேப்டன். தன் படங்களில் நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கேப்டன் சினிமாவில் சாதித்து விட்டோம் அரசியலில் இனி தன்னால் அமைந்ததை மக்களுக்கு செய்வோம் என்று நினைத்த அவர். கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தார் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

முன்னாள் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம் பேசவே நடுங்கும் பல பேர் மத்தியில் அவரை எதிர்த்துப் பேசி சவாலும் விட்டவர் விஜயகாந்த்.

சில வருடங்களாக விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது வெளிநாடுகள் சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்களின் தற்போதைய நிலையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ரசிகர்களே நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு விஜயகாந்தின் உடல்நிலை இருந்தது. விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் ஒரு துணிச்சலான அரசியல் தலைவர் நமக்கு கிடைத்து இருப்பார்.

விஜயகாந்த் அவர்கள் இன்று பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் கொண்டாடி அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார். நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்த கேப்டனை பார்த்த ரசிகர்கள் பொங்கல் வாழ்த்துக்கள் இணையத்தில் வழியாக தெரிவித்து வருகின்றனர்.