பிக்பாஸ் சீசன் 4 தற்போது தமிழில் சூடு பிடித்து கொண்டிருக்கிறது சோமசேகர் முதலில் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஆரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பாலாஜி, கேப்ரியலா, ரியோ, ரம்யா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்னும் ஆறு நாட்கள் மிஞ்சிய நிலையில் யார் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ணுவார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸில் ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சம்பள பட்டியல் தற்போது ஒரு தனியார் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த பத்திரிக்கையின் அடிப்படையின்படி கேப்ரியெல்லாவிற்கு சம்பளம் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வைத்து பார்க்கையில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம், ஆக 100 நாட்கள் கேப்ரியலா இருந்துள்ளார். அதாவது 70 லட்சம் கேப்ரியெல்லா இந்த பிக்பாஸ் வீட்டில் இருப்பதன் மூலம் சம்பாதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் இந்த டைட்டிலை வென்றால் அவருக்கு சம்பளம் ஒரு கோடியை நெருங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பெரிய தொகையை வென்றிருப்பது இதுவே பெரிய விஷயம் என்று கூறலாம். அதுமட்டுமல்லாமல் இது போன்று பலரது சம்பளமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அந்த சம்பள பட்டியல்.