keerthy suresh temple visit

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். முதலில் கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரியாக நடித்திருந்தார்.

அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பு அனைவரும் அறிந்ததே. நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரி ஆகவே வாழ்ந்திருப்பார் கீர்த்தி சுரேஷ். இந்த பொண்ணுக்கு இப்படியும் நடிக்க தெரியுமா என்று அச்சாரப்படும் வகையில் நடிப்பில் அசத்தியிருந்தார். நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு எக்கச்சக்க விருதுகள் குவிந்தது.

கமர்சியல் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் கீர்த்தி. தற்பொழுது தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியாக சாணி காயிதம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

கூலான ஹீரோயின் என்றால் சினி வட்டாரத்தில் கீர்த்தி சுரேஷை தான் கூறுவார்கள். சமீபத்தில் கீர்த்தி மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வசித்து அசதி இருந்தார் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது கோவிலுக்கு சென்று வருவார் கீர்த்தி. மக்கள் கூடும் இடத்தில்சகஜமாக சால் ஒன்றினை முகத்தில் மூடிக்கொண்டு நடந்து செல்லும் பழக்கத்தை கொண்ட கீர்த்தி இன்று அலமேலு மங்காபுரம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.