special train chennai to nagercoil in pongal

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது என்னவென்றால் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 12 ,13-ஆம் தேதி இரவு 10 .30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 16 , 17ஆம் தேதியில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 .40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

அதுபோல சென்னை சென்ட்ரலில் இருந்து 13-ஆம் தேதி இரவு 11 .30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு கோயமுத்தூர் செல்லும். மறு மார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4 .30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேற்கொண்ட சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் இவ்வாறு செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது