3 வது காதலனோடு ஓடிய மனைவி..!!துரத்தி வெட்டிய 2 வது கணவன்..!!

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் சாமியம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசு. இவர் கவுந்தப்பாடியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மனைவி பத்மாவுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு பத்மாவை அழைத்து வந்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் அன்பரசு.

இந்நிலையில் பத்மாவிற்கு அப்பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவருக்கும் புதிதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பத்மா அடிக்கடி தமிழ் செல்வனுடன் சேர்ந்து வெளியே சுற்றி வந்துள்ளார். இது தெரிந்த அன்பரசு அடிக்கடி பத்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பத்மா தமிழ் செல்வனுடன் சென்று விட முடிவெடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழ் செல்வனுடன் பத்மா பைக்கில் சென்ற போது ரகசியமாக பதுங்கி இருந்து வழிமறித்த அன்பரசு மிளகாய் பொடியை தமிழ் செல்வன் முகத்தில் தூவியுள்ளார். பிறகு பத்மாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார். இதனால் காயமடைந்த பத்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான அன்பரசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.