இன்னும் சில மணி நேரங்களில் வலுப்பெறுகிறது புரவி புயல்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் நிவர் புயல் வந்து சென்றது. இதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது மற்றுமொரு புயல் உருவாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மேலும் வலுப்பெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது.

இதற்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மழைக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன்- குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த புயல் பாம்பனில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்னும் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகின்றது.