மூன்றே நாளில் மலர்ந்த டீன் ஏஜ் காதல்..!! ஆன்லைன் காதலால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

தற்பொழுது ஆன்லைன் மூலம் அனைத்து சிறுவர்களுக்கும் போன் உபயோகிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. எப்பொழுதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருப்பது தற்போது உள்ள குழந்தைகளுக்கு வேலையாக உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் பல அசம்பாவிதங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு நடந்து வருகின்றது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் எப்பொழுதும் போனும் கையுமாக இருந்துள்ளார். அவருக்கு இணையதளம் வழியாக ஒரு சிறுவனின் நட்பு கிடைத்துள்ளது. பழகிய மூன்றே நாளில் அந்த சிறுவனை காதலித்துள்ளார் அந்த சிறுமி.

அந்த சிறுவனும் அந்த சிறுமியை ஒரு இடத்திற்கு தனியாக வந்து சந்திக்குமாறு கேட்டுள்ளார் இ. தனைத் தொடர்ந்து அந்த சிறுவனை நம்பி, சென்னையை சேர்ந்த அந்த சிறுமி திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரை சேர்ந்த தனது காதலனை சந்தித்து வந்துள்ளார். அப்பொழுது அந்த காதலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார்.

தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுவனின் பெயரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் மகளிர் போலீசார் சிறுவனை திருவள்ளூர் மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவனது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.