கல்யாண பத்திரிக்கை வைப்பது போல் வந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்த கும்பல்..!! சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு கும்பல் திருடியுள்ளது. ஆனால் இது வித்தியாசமான முறையில் தனது திருட்டை செய்துள்ளது.

அருப்புக்கோட்டை கணேஷ் நகரில் ராம் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ராம்குமார் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து வீட்டுக்கு வந்த கும்பல் ஒன்று கல்யாண பத்திரிக்கை வைத்து வைத்திருப்பது போல நடித்து உள்ளது. இதனால் அவர்களை உள்ளே அழைத்த ராம்குமாரின் மனைவி கத்தி முனையில் வாயில் டேப் போட்டு கட்டியுள்ளது அந்த திருட்டு கும்பல்.

மேலும் ராம்குமாரின் இரண்டு பிள்ளைகளின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவியை மிரட்டி வாங்கியது. வாங்கிய பிறகு பீரோவில் உள்ள 30 பவுன் நகையும் அந்தப் பெண் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளது.

ராம்குமார் வீட்டிலிருந்து இந்த கும்பல் வேகமாக வெளியே ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவரின் கட்டை அவிழ்த்து நடந்ததைக் கூறி உள்ளனர். விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து வைத்துள்ளனர் . பின்னர் இந்த திருட்டு சம்பந்தமாக ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்து உள்ளனர் காவலாளிகள்.