சிறுவனை கடத்தி கொன்ற கொடூரன்..!! ஒரு சிறிய எழுத்துப் பிழையால் மாட்டிக்கொண்டான்..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் சிங். இவர் தனது தூரத்து உறவினர் சிறுவன் ஒருவனை கடத்தி உள்ளான். இது சம்பந்தமாக சிறுவனின் பெற்றோரிடம் 2 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டி உள்ளான். ஆனால் அவர்கள் பணம் திரட்ட முடியாததால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவன் சிறுவனை கொலை செய்து உள்ளான்.

போலீசார் பெற்றோருக்கு அனுப்பிய மெசேஜ்களை பார்த்துள்ளனர். இதில் பல இடங்களில் அவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உடனே அனுப்பி இருந்தான் . இதையடுத்து சிறுவன் கடத்தப்பட்ட இடத்தில இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சந்தேகத்தின் பெயரில் 10 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ராம் பிரசாந்தும் ஒருவ. ர் இவர்கள் அனைவரையும் போலீசார் மெசேஜில் உள்ள தவறான வார்த்தைகளை எழுத சொல்லி உள்ளனர். அப்போது ராம்பிரசாத் மெசேஜில் எப்படி தவறாக எழுதினாரோ அவனும் அதே போலவே எழுதியுள்ளான். இது எடுத்து அவன் தான் கொலையாளி என்பதை போலீசார் உறுதி செய்து கொண்டனர்.

அவனை விசாரித்து நான் தான் கொலை செய்தேன் என அவன் ஒப்புக்கொண்டான். இதை அடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.