தாலிகட்டும் சமயத்தில் நிறுத்து..!! தாலி கட்டாதே..?? என கூறிய மணப்பெண்..!! காதலன் வந்துகொண்டு இருக்கிறான்..!!

கல்யாணம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைவரும் வாழ்வில் நடக்கக்கூடிய முக்கியமான நிகழ்வு. வாழ்வையே திருப்பிப் போடக் கூடிய ஒரு நிகழ்வு. அதுவும் தமிழகத்தில் கல்யாணம் என்றால் ஒரு மாதத்திற்கு முன்னரே கல்யாண ஏற்பாடுகள் அனைத்தும் நடக்கும்.

எல்லா உறவினர்களும் சேர்ந்து திருமணத்தை நடத்துவது மட்டுமில்லாமல் கல்யாணத்திற்கு என்று செலவுகளும் அதிகமாகும். அதுபோல கல்யாணச் செலவுகள் எல்லாம் செய்து எல்லா உறவினர்களையும் கூட்டி திருமண மண்டபத்தில் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி, மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கு தாலி கட்டும் சமயத்தில் தாலி கட்டாதே நிறுத்து எனக் கூறிய மணப்பெண் குறித்து மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மட்ட கண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன, அனைத்து உறவினர்களும் திருமண மண்டபத்திற்கு வந்த நிலையில் மணமக்கள் இரண்டு பேரும் இருந்தனர், படுகர் இன வழக்கப்படி மணமேடையில் மணப்பெண் மூன்றுமுறை சம்மதம் தெரிவிக்க வேண்டும், அதன் பின்புதான் மாப்பிள்ளை தாலி கட்ட வேண்டும்.

அதன்படி மணப்பெண்ணிடம் இரண்டு முறை சம்மதம் கேட்ட பொது சம்மதம் தெரிவித்த மணப்பெண், மூன்றாவது முறை கேட்கும்போது சம்மதமில்லை என்று கூறி தாலி கட்ட வந்த ஆனந்தின் கைகளை தடுத்து நிறுத்தியுள்ளார், தான் விரும்பும் ஒருவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் என்னை வந்து கூட்டிச் செல்வார் என்று மணமேடை விட்டு எழுந்து உள்ளார். அவரை உறவினர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதன்பிறகு மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ஆனந்த் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் தவித்துப் போய் இருந்தார். இந்த நிலையில் மணப் பெண்ணை அவளது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாகவும், காதலனை தேடி சென்று விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து மணப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் தன் பெற்றோருடன் இருக்கிறேன் . மாப்பிள்ளை மிகவும் மோசமான நபர் என்பதால் நான் அந்த கல்யாணத்தை நிறுத்தினேன், யாரையும் காதலிக்கவில்லை என்று அந்த வீடியோவில் விளக்கம் கூறி தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.