பாலாஜி ஷிவானி இடையே மலர்ந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையே காதல் டிராக் ஓடிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்போது பாலாஜியும் ஷிவானியும் அடிக்கடி ஒன்றாக சுற்றுவது போன்று பல வீடியோக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

ரசிகர்களும் இருவருக்கு இடையில் காதல் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து போட்டியாளர்களுக்கு தெரிந்தும் யாரும் இதுவரை அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. இந்நிலையில் பாலாஜியை தன் பிள்ளையாக சொல்லும் அர்ச்சனா பாலாஜியை கூப்பிட்டு ஒரு அட்வைஸ் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற fm.போட்டியில் பாலாஜி சுற்றி ஒரே ஒரு பெண் சென்று கொண்டிருப்பதாக அர்ச்சனா கூறினார். இதுகுறித்து அர்ச்சனாவிடம் பாலாஜி விளக்கம் கேட்க அப்பொழுது அர்ச்சனா பாலாஜி உனக்கு வெளியே ஒரு இமேஜ் ப்ரொஜெக் ஆகி கொண்டுள்ளது என்று கூற ஆனால் எனக்கு பிரச்சினை இல்லை என்றாலும் அது ஷிவானிக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் எனவே காதல் இருந்தால் அதை கைவிடுமாறு அவர் கூறியுள்ளார் .

இதுகுறித்து பாலா ஷிவானியிடம் எனக்கு எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை என்றும் நான் அவரை காதல் செய்யவில்லை என்றும் அர்ச்சனாவிடம் பாலாஜி கூற , அப்படி ஆனால் அப்படி ஆகவே இரு, என்று அர்ச்சனா கூறியுள்ளார். ஆனால் இன்று நடந்த கொஞ்ச நேரத்திலேயே பாலாஜி சிவானி இடையே இருக்கும் காதலை உறுதி செய்யும்படி பாலாஜி ஷிவானியிடம் அர்ச்சனா ஒன்னும் எனக்கு அம்மா இல்லை நான் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். இதைப் பார்க்கும் பொழுது நெட்டிசன்கள் சற்று குழம்பி தான் உள்ளனர்.