புரோட்டா பிரச்சினையால் அரசியல் கட்சி பிரமுகரை சுட்ட ராணுவ வீரர்..!!

திருநெல்வேலியில் உள்ள பெருமாள் புரத்தை சேர்ந்தவர் பெரியதுரை. இவர் புரோட்டா கடை நடத்தி வருபவர். இவர் மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

புரோட்டா கடை அருகே வசித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெபமணி வசித்து வருகிறார். பெரியதுரை பரோட்டா கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கழிவுகளை வீட்டின் அருகே கொட்டியதால் ஜெபமணி பெரியத்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த ஜெபமணி தனது வீட்டிலிருட்னது துப்பாக்கியை கொண்டுவந்து பெரியத்துறையை சுட்டுள்ளார். இதனால் பெரிய குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் ஜெபமணியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது கையில் துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.