ஆந்திராவில் பள்ளி திறந்த பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!! தமிழ்நாட்டில் அதன் அலை ஏற்படுமா..?

தற்பொழுது ஊரடங்கு முடிந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் கடந்த நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரானா தொற்று இருப்பதாக செய்தி தற்போது வெளிவந்துள்ளது. .

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதல் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் வழக்கம் போல் நடக்க ஆரம்பித்தன.

தற்போது ஆந்திராவில் பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் 150 ஆசிரியர்களுக்கும் மற்றும் 10 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் மீண்டும் இந்த செய்தி ஆந்திர மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதனால் ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் பள்ளிகள் திறப்பது தாமதமாகும் என்றும் கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.