பணியில் இருக்கும்போதே ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ்..!!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தவர் சகாயம் ஐஏஎஸ். இவர் ஆட்சியராக இருந்தபொழுது கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தவர். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவியில் உள்ளார்.

இந்த பதவியில் 6 வருடமாக வகித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பல அரசியல் அழைப்புகள் வந்துள்ளன. ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் தனித்து ஒருவராக நின்று வருகிறார். சகாயம் முதலமைச்சராக அமைந்தால் நன்றாக இருக்கும் என பல இளைஞர்கள் தற்போது வரை கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. 57 வயதிலேயே விஆர்எஸ் கேட்டுள்ளார். சகாயம் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு பதவியில் இருந்து விடுவிக்கப் படுவார்.

இதற்கான காரணம் முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகள் அவர் உள்ளதாக கூறப்படும் நிலையில் சகாயம் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது. மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் விருப்ப ஓய்வு கேட்டு இருப்பது மிகவும் பேச்சு பொருளாக மாறி உள்ளது.