முப்பது வயதாகியும் கல்யாணம் ஆகாததால் பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்த இளைஞர்..!!

சமீபகாலமாக பல இளைஞர்கள் திருமணமாகாமல் இருக்கின்றனர் இதற்கு காரணம் பாலின விகித பிரச்சினை என்பது புரியாமல் பலர் இருக்கின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ இவருக்கு வயது முப்பதை தாண்டி விட்டது. திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டு வந்துள்ளார். எந்த வரனும் சரியாக அமையவில்லை.

தனக்கு வரன் கிடைக்காததற்கு காரணம் அருகில் உள்ள கடை தான் என்று அல்பினுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தனது வரங்களை கடையில் உள்ள நபர்கள் கெடுப்பதாக அவர் கருதியுள்ளார். இதனால் காவல் துறையில் புகார் அளித்துள்ளார் . தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடையில் சூதாட்டம் ஆடுவதாகவும் குடித்துவிட்டு தொந்தரவு தருவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

இது காரணமாக கன்னூர் நகராட்சிக்கும் சென்று அவர் புகார் அளித்துள்ளார். ஆனால் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தானே பக்கத்து கடையை இடித்து தள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக வாடகை ஜேசிபி ஒன்றை வாங்கி கடையை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அல்பினை கைது செய்துள்ளனர். இது குறித்த வீடியோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.