ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம்..!! ஆசிரியரே இப்படி செய்தால் என்ன செய்வது..?

பெற்றோர்கள் தற்போது தன் பிள்ளைகளை வெளியில் அனுப்புவது என்பது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. ஆனால் பள்ளிக்கூடத்திற்கு தற்போது மிகவும் பாதுகாப்பு இல்லாத ஒன்றாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகில் உள்ள மேலச்சேரி மேட்டுப் பகுதியை சேர்ந்த 26 வயதான கார்த்திக் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இங்கு அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 35 வயது பெண்ணை தன் ஒரே மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாற்றி வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றது . இதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் கார்த்திக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நான் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறேன்.உங்கள் மகனை ஆன்லைன் வகுப்பு படிக்க வைக்க என்னுடைய வீட்டிற்கு அனுப்புங்கள்.

நான் அவனுக்கு ஆன்லைன் வகுப்பு சொல்லி தருகிறேன் என்று கூறி விட்டு வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணும் செங்கல்பட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மகனைக் கார்த்திக் வீட்டில் நடத்தப்பட்டுவரும் வகுப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனும் ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளான்.

மூன்று மாதங்களாக சென்ற அந்த மகன் கடந்த சில நாட்களாக வீட்டில் சகஜமாக இல்லாமல் வழக்கத்தைவிட மிகவும் சோர்வாக காணப்பட்டார். அடிக்கடி அந்த மாணவன் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தான். இதனை பார்த்த அந்த மாணவனின் தாயார் தன்னுடைய மகனிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

13 வயது சிறுவன் என்றும் பாராமல் மிகவும் கொச்சையாக நடந்து கொண்டுள்ளார் அந்த ஆசிரியர். அந்த சிறுவனை வலுகட்டாயமாக பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் பாலியல் இச்சையில் ஈடுபட்டு வந்ததை அவன் தனது செல்போனில் படம் எடுத்து கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்து ஆசைக்கு அடிபணிய வைத்துள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாயார் உடனே ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆசிரியர் அங்கு குளித்துக் கொண்டிருந்தார் .

அதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் அவரது செல்போனை சோதனை செய்து அதில் தன்னுடைய மகன் சம்பந்தமாக இருந்த அனைத்து புகைப்படங்களையும் தன்னுடைய செல்போனுக்கு அனுப்பிவைத்து சாமார்த்தியமாக அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளா. ர்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஆசிரியர் கார்த்திகை போல் போக்ஸோ சட்டத்தின்கீழ் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.