ஆன்மீகத்தில் இறங்கிய பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா..!!! புகைப்படங்கள் உள்ளே.

sridivya temple visit

நடிகை ஸ்ரீதிவ்யா எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பதற்காக தனது இளம் வயதில் இருந்து பல போட்டோஷுட் புகைப்படங்களை எடுத்து தயாரிப்பாளர்கள் கண்ணில் தென்படும் படி செய்தது ஸ்ரீதிவ்யா தரப்பு. ஸ்ரீதிவ்யாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் சற்று சூடாகவே இருந்தது . எப்படியெல்லாம் ஸ்ரீதிவ்யாவை கவர்ச்சியாக காட்ட முடியுமோ அப்படியெல்லாம் போட்டோ ஷூட் எடுத்தார்கள் .

அதுமட்டுமல்லாமல் தெலுங்குவில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்து தெலுங்கு மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட நடிகையாக வலம் வந்தார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அப்போது ஸ்ரீ திவ்யாவிற்கு கிடைத்ததுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே யார் இந்த புதுமுகம் என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு பிரபலம் அடைந்தார். ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கை என்று போய்க்கொண்டிருந்தது ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கை.

ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு சில இயக்குனர்கள் கொஞ்சம் கவர்ச்சி நிறைந்த கதைகளை சொல்லி பார்த்திருக்கிறார்கள் ஆனால் ஸ்ரீ திவ்யா கவர்ச்சி வேண்டாம் என்று கறாராக இருந்ததாக கூறப்படுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் கொடுத்த பெரிய வரவேற்பை சரியாக பயன்படுத்தி ஸ்ரீதிவ்யா முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரது நேரமோ என்னமோ முதல் படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிய ஹிட் என்று சொல்லிக்கொள்ளும் அளவில் எந்த படமும் அமையவில்லை என்பதுதான் உண்மை.

தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதர்வாவுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற படம் ஒரு சில பிரச்சினைகள் காரணத்தினால் தற்பொழுது பாதியில் நிற்பதால் மனம் நொந்துபோன ஸ்ரீதிவ்யா. சில காலங்கள் தனிமையை விரும்பி சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஸ்ரீதிவ்யா தற்பொழுது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளாராம்.

தனக்கு ஓய்வு கிடைக்கும்போது தனது குடும்பத்துடன் தான் பார்க்க ஆசைப்படும் ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் பழக்கத்தை வைத்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா. சமீபத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு மிகவும் பிடித்தது சத்குரு ஜாக்கி வாசுதேவ் அவர்களின் உரையாடலாம். அவர் கூறும் கருத்துக்களை ஸ்ரீதிவ்யா தற்போது விரும்பி கேட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

sridivya sathguru

சத்குரு ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்து தெரிவித்தால் அதனை உடனே ரீட்வீட் செய்வாராம். ஜாக்கி வாசுதேவ் அவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை செல்வாக்கு அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடத்தும் சிவராத்திரி பூஜைக்கு தமன்னா முதல் காஜல் வரை அனைத்து முன்னணி நடிகைகளும் தவறாமல் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நெய் ஹல்வா போல இருந்த தமன்னாவை இந்த நிலையில் பார்க்கவே கஷ்டமா இருக்கு…!!! ரசிகர்கள் உருக்கம். வீடியோ உள்ளே.