பிறந்து மூன்றே வாரம் ஆன பச்சிளம் குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அரசாங்க அதிகாரி..!! பணிமாற்றம் செய்யப்பட்டார்..!!

ias officer sowmiya

உத்திரபிரதேசத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியான சௌமியா பாண்டே என்பவர் சமீபத்தில் மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே இவர் கர்ப்பிணியாக இருந்தார்.

அதன் பின் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார் சௌமியா . பிரசவ கால விடுப்பு எடுக்காமல் பெண் அதிகாரி அல்லது மூன்று வார கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். தனது கைக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

இவரது அரசாங்க கடமை குறித்து அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். பல இணையவாசிகள் பிரசவ கால பெண் அதிகாரிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதேநேரம் சரியான ஓய்வுக்குப் பிறகு பணிக்கு வர வேண்டும் என்றும் பலர் அன்பான வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்சௌமியா பாண்டி கான்பூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டது மேலும் இது வழக்கமான பணி மாற்றம் தான் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : யானையின் மீது அமர்ந்து யோகா செய்த பாபா ராம்தேவ் கீழே விழுந்தார்..!! மருத்துவமனையில் அனுமதி..!! வைரலாகும் வீடியோ..!!