அமேசானில் ஆர்டர் செய்த செல்போனை ஆட்டைய போட்ட திருடன்..!!! அமேசான் CEO எடுத்த அதிரடி நடவடிக்கை.

amazon customers

அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு நடந்த கசப்பான அனுபவத்தை புரிந்துகொண்டு சர்ப்ரைஸ் ஒன்றை அவருக்கு கொடுத்து அசத்தி உள்ளது. பொதுவாக ஆன்லைனில் நாம் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் ஏதாவது ஒரு பிழைகள் அல்லது குறைகள் இருக்கத்தான் செய்யும் நாம் நேரில் பார்த்து வாங்கும் பொருளே தரம் இல்லாமல் சில நேரத்தில் அமையும் போது ஆன்லைனில் பார்த்து வாங்கும் பொருட்கள் எப்போதும் தரமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

ஆன்லைனில் தரமான பொருட்களை விற்பனை செய்யும் நிறைய நிறுவனங்கள் இருந்தாலும் அமேசான் தனது வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம் என்று சேவை வழங்கி வருகிறது. அமேசானின் சி இ ஓ ஜெப் பெசோஸ் வாடிக்கையாளரை மிகவும் மதிக்க கூடியவர். தனது வாடிக்கையாளர்கள் எப்போதும் தரமான பொருளை வாங்க வேண்டும் அவர்களுக்கு குறித்த நேரத்தில் பொருளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுபவர். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு மும்பையிலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பி உள்ளாராம்.

மும்பையில் வாடிக்கையாளர் ஒருவர் அமேசானில் தனது பாட்டிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதற்காக நோக்கியா செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அமேசான் வழியாக ஆர்டர் செய்த அந்த போன் அந்த வாடிக்கையாளர் கைக்கு போய் சேரவில்லை. அமேசான் டெலிவரி பாய் யாரோ தனது வீட்டின் நுழைவாயிலில் வைத்து சென்றிருக்கிறார் யாரோ ஒருத்தர் திருடன் அதனை திருடி சென்று இருக்கிறார் ஆனால் எனக்கு நான் செல்போனை பெற்றுவிட்டதாக அறிவிப்பு

அமேசான் தரப்பில் இருந்து வந்திருக்கிறது என்று தென்னந் தெளிவாக நடந்ததை விவரித்து அமேசன் சிஇஓ ஜெப் பெசோஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அத்துடன் நான் இந்த மொபைல் போன் சம்பவம் குறித்து உங்களுடைய நிர்வாகிகளை தொடர்பு கொண்டேன் ஆனால் அவர்கள எனது பிரச்சினைக்கு பதில் சொல்லாமல் பேசினார்கள்.

அன்று என்ன நடந்தது என்று சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ ஒன்றை இந்த மின்னஞ்சலில் அனுப்பி இருக்கேன் பாருங்கள் என்று கூறியுள்ளார் இனிமேல் உங்கள் வலைதளத்தில் வந்து பொருட்களை வாங்க ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிப்பேன் என்று கூறியவர் இந்த சம்பவம் எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த மின்னஞ்சலை பார்த்தவுடன் அமேசான் வாடிக்கையாளர்களின் குழுவிலிருந்து அதிகாரிகள் உடனே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரை தொடர்புகொண்டு ஜெப் பெசோஸ் உங்கள் மின்னஞ்சலைப் பெற்றார் நான் அவர் சார்பாக பேசுகிறேன் என்று கூறியது மட்டுமல்லாமல் நாங்கள் அந்த வீடியோவை பார்த்தோம் யாரோ திருடிவிட்டு செல்வது போல தெரிகிறது என்று பேசிய அமேசான் நிறுவன அதிகாரிகள் அதனைத் தொடர்ந்து சிலநேரங்களில் அந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தது.

அதன்பின் அந்த வாடிக்கையாளர் கூறியது ஒரு கம்பெனியின் தலைவர் அதிரடியாக இந்த நடவடிக்கை எடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அமேசான் வாடிக்கையாளரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நடந்தது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.