நெய் ஹல்வா போல இருந்த தமன்னாவை இந்த நிலையில் பார்க்கவே கஷ்டமா இருக்கு…!!! ரசிகர்கள் உருக்கம். வீடியோ உள்ளே.

tamanna after corona treatment

தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா அதன் பின் பாலாஜி சக்திவேலின் கல்லூரி என்ற படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தமிழில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.

tamanna hot

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தெலுங்கு ரசிகர்களை தன் வசம் ஆக்கிக் கொண்டார் தமன்னா. அம்மணி தெலுங்குவில் கட்டிய தாராளத்தல் தயாரிப்பாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு அட்வான்ஸ் கொடுப்பார்களாம். தெலுங்கு படவுலகில் பிழைக்க தெரிந்த பெண் என்று தமன்னாவை சொல்வார்களாம். பாடல் காட்சிகளில் கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் இயக்குனர் விரும்புவது போல நடித்து கொடுப்பாராம்.

சமீபத்தில் வெளியான தேவி 2 படத்தில் தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து போட்ட ஆட்டம் பற்றி படம் பார்த்தவர்களுக்கே தெரியும். அது மட்டுமல்லாமல் தெலுங்கு படமான f2 என்ற படத்தில் பிகினி உடை அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து கிறங்கடித்தார் தமன்னா. தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர் எடுத்தபின் பாலிவுட்டிலும் நடிக்க ஆசைப்பட்ட தமன்னா பிரபுதேவாவின் உதவியோடு அங்கு ஒரு சில ஹிந்திப் படங்களில் கமிட்டானார் ஆனால் அங்கு இவர்க்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

சில நாட்களுக்கு முன்பு தமன்னாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் வந்தது. அதனை உண்மை என்று உறுதிப்படுத்திய தமன்னா தரப்பு. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமன்னா தற்போது வீடு திரும்பிய வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளது

அந்த வீடியோவில் மாஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு தன் வீட்டிற்கு காரில் வந்து இறங்குகிறார் தமன்னா இறங்கிய பின் தனது தாய் மற்றும் தந்தையை கட்டி அணைத்து விட்டு வீட்டிற்குள் சென்று செல்லப் பிராணியை கொஞ்சுகிறார் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் தமன்னா முகம் வாடி போய் இருந்தது அந்த வீடியோவில் இதனை பார்த்த ரசிகர்கள் தமன்னாவை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.