பிக்பாஸ் கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஜித்தன் ரமேஷ், ஷிவானி..!! காரணம் எதற்காக தெரியுமா.?

இப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு இருக்கும் போட்டியாளர்கள் ஷிவானி, ரம்யா, சுரேஷ் சக்ரவர்த்தி. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில்ஷிவானிக்கு 2 மில்லியன் பாலோவர்ஸ்.

இவர்தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதற்கென ஆர்மியை தனியாக ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பிக்பாஸில் நேற்று கொஞ்சம் வித்தியாசமாக விறுவிறுப்பாக நடந்தது.

வீட்டிற்கு புதுவரவாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா 17வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள முதல் ப்ரமோவில் வீட்டில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைந்த நபர்களை கூறும் பொழுது நிறைய போட்டியாளர்கள் மற்றும் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் தற்போது கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இது குறித்து பல எதிர்ப்புகளும் வர உள்ளன, ஏனெனில் இவர்கள் இருவரும் தற்போது வீட்டில் சுவாரஸ்யமாக விளையாட ஆரம்பித்து விட்டனர், நடனம் பாட்டு என எல்லாவற்றிலும் அசத்தி வருகின்றனர். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த போட்டியில் இதற்கு தகுதியானவர்கள் ரேகா தான், சுவாரசியம் இல்லாமல் விளையாடி கொண்டிருப்பதாக பல கருத்துக்கள் கூறிவருகின்றன .

மேலும் இது குறித்து பாலா பாவம் இந்த பொண்ண புடிச்சு அடைச்சிட்டாங்க என சுரேஷிடம் மிகவும் வருத்தப் படுகிறார். இதனால் பாலாவிற்கு ஷிவானி மீது ஒரு காதல் ஏற்பட்டது என்று கொளுத்திப் போட்டு வருகின்றனர்.