நைட் ஆனா போதும் போதையில் ஒரே கூச்சல்..!! கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நடந்தது என்ன..?

கோவை சரவணம்பட்டி பகுதியில் இருந்து இன்ஜினியர் காலனி குடியிருப்போர் நல சங்கத்திற்கு ஒரு புகார் கடிதம் வந்தது.

அந்தப் புகார் கடிதத்தில் இங்கு 600 வீடுகள் உள்ளது, அருமையான காத்து, சுவையான தண்ணீர் என்று மக்கள் நிம்மதியாக இருந்தோம்.. போன வருடம் இங்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஆரம்பித்தது. அதிலிருந்து காணாத காட்சி எல்லாம் நாங்கள் பார்த்து வருகிறோம். சிறு வயது பெண்களும் ஆண்களும் சரக்கு அடிக்கிறாங்க , அதுமட்டுமில்லாமல் ரோட்டில் பைக்கில் கட்டி புடிச்சி கிட்டு இருக்காங்க, பார்க்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு.

திருமணமாகாத பெண்ணும் ஆணும் சேர்ந்து தங்குவது தப்பில்லை என்று கோர்ட்டில் சொல்லிடுச்சு, என்று நாம கேட்டா பதில் சொல்றாங்க வெளியே வந்து பாருங்க எவ்வளவு சரக்கு பாட்டில் ஆணுறை எல்லாம் இருக்குனு பாக்கவே ரொம்ப கன்றாவியா இருக்கு என்று மக்கள் புகார் அளித்துள்ளன. ர்

இதனால் தகவல் இடத்திற்கு விரைந்த குடியிருப்பு நல சங்கம் அங்கு உள்ள மேலாளரை விசாரித்து அவர்களை கையும் களவுமாக பிடித்து அதன்பின் காவல்துறை அனுமதியோடு அந்த கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் மற்றும் நிர்வாகத்தினை கடுமையாக எச்சரித்தனர். அதன்பின்பு இரவோடு இரவாக அந்த கெஸ்ட் ஹவுஸ் மூடப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் நிம்மதியாக தற்பொழுது எந்த பிரச்சினையுமின்றி வசித்து வருகின்றனர்.