இரவு நேரம் கடற்கரை ஓரம் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ்..!!! வெளியான புகைப்படங்கள்.

keerthy anirudh

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான நடிகைகள் மட்டும் தான் பல வருடங்கள் தாக்கு பிடிக்க முடியும் என்ற எண்ணத்தை தகர்த்து எறிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இதுவரை இவர் நடித்த படங்களில் எந்த ஒரு எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளும் இல்லாமல் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கு நடிகையர் திலகம் என்ற படம்தான் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை ஒரு கமர்சியல் படத்திற்காக கீர்த்தி சுரேஷை புக் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகையர் திலகம் படத்தை பார்த்துவிட்டு இப்படி ஒரு அருமையான நடிகையை கமர்சியல் படத்திற்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம் என்று வருந்தும் அளவிற்கு அந்த படத்தில் நடித்து அசத்தியிருப்பார் கீர்த்தி.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று கதையில் அச்சு அசல் சாவித்திரியாகவே வாழ்ந்து அசத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். பிரபல இயக்குனர் முருகதாஸ் அந்த படத்தை பார்த்து விட்டு இப்படி ஒரு நடிகைக்கு என் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்காமல் போகிவிட்டேன் என்று ஒரு பேட்டியில் வருத்தப்பட்டு இருந்தார். வித்தியாசமான கதைகளை தற்பொழுது தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி தனுஷின் அண்ணன் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் சாணி காயிதம் என்ற படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது இதை பார்த்த ரசிகர்கள் தலைவி அனிருத்துடன் என்ன செய்கிறார் அதுவும் இரவு நேரத்தில் கடற்கரை ஓரத்தில் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் சுருண்ட முடி ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு அனிருத்துடன் கீர்த்தி இருப்பது போல இருந்தது.

அதன்பின்தான் தெரிந்தது உண்மை அந்தப் புகைப்படம் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படமாம் . அனிருத் கீர்த்தி சுரேஷுக்கு நெருங்கிய நண்பர் தானாம். இது தெரியாமல் சமூக வலைத்தளத்தில் என்னென்னமோ அக்கப்போரு பண்ணிட்டாங்க அவரது ரசிகர்கள்.