பிரசவம் பார்த்த மருத்துவர் முகமூடியை இழுக்கும் பச்சிளம் குழந்தை..!! இணையத்தில் வைரலாகும் நம்பிக்கைக்குரிய புகைப்படம்..!!

தற்பொழுது உலகத்திலுள்ள நாட்டு மக்கள் அனைவரும் வேண்டும் ஒன்றே ஒன்று கிருமித்தொற்று கொரானா இல்லாத வாழ்வை தேடி மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் அந்த நல்ல நாள் என்று என்று தான் உலக மக்கள் அனைவருமே காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் துபாயில் பிறந்த குழந்தை ஒன்று பிரசவம் பார்த்த மருத்துவர் இன் முகமூடியை கழட்டும் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

துபாயைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவர் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தனது கைகளால் தூக்கி உள்ளார். அப்பொழுது இந்த மருத்துவரின் முகத்தில் இருந்த முகமூடியை தனது கைகளால் குழந்தை அகற்றியது. இந்த புகைப்படத்தை தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த மருத்துவர், இது அனைவரும் முகமூடிக்கு விடை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த குழந்தை எனக்கு உணர்த்தி உள்ளதாக அவர் கேப்ஷன் போட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல உலக மக்களுக்கு இந்த புகைப்படம் கொரானா இல்லாத வாழ்வை நாம் சீக்கிரம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த புகைப்படம் பல பேருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.