செய்த தவறுக்காக வருந்தும் ரஜினிகாந்த் ..!! அனுபவமே பாடம் என்று ட்வீட்..!!

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் குறித்து அவவ்போது செய்திகள் வெளிவரும். இவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் செய்திகள் உடனே வைரலாகி விடும்.

ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இந்த மண்டபத்திற்கு கடந்த 6 மாதமாக சொத்து வரியை கட்டச் சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக மண்டபம் திறக்கப்படாததால் சொத்து வரியை குறைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு செப்டம்பர் 23ஆம் தேதி மனு ரஜினி சார்பில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவின் மீதான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் மனு அனுப்பப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பொறுமை காக்காமல் நீதிமன்றத்தை நாடி எதற்காக வந்தீர்கள், ரஜினிக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டரில் தற்பொழுது ரஜினிகாந்த் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நான் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும், தவறை தவிர்த்து இருக்கலாம், அனுபவமே பாடம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் அவரது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.