எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருந்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 30. இவர் ஓசூர் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பித்த இருவர் வாழ்க்கையிலும் திடீரென ஒரு மன வருத்தம் ஏற்பட்டது.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஓசூர் லஷ்மி நாராயணன் அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர் இந்த தம்பதியினர்.

நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் குடும்பத்தில் திடீரென மணிகண்டனுக்கு மனைவி சிந்துஜாவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிகண்டன் சிந்துஜா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சிந்துஜாவின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்து உள்ளார்.

இதன் பிறகு அட்கோ காவல் நிலையத்தில் மணிகண்டன் சரணடைந்துள்ளார். மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில் சில மாதங்களாக என் மனைவி சிந்துஜா செல்போனில் பேசி வந்துள்ளார். பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை, அவர் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நான் அவரை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த குழந்தையை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது.