என் பொண்ணு இப்படி சாவல. மீண்டும் அழுத்தமாக சொல்லும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்..!! 1

கொரோனா வந்து உயிரிழப்பவர்களின் சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கும் தமிழகத்தில் மேலும் பல சோகங்கள் நெஞ்சை உலுக்கி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் சிறுமி ஜெயப்பிரியா மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியின் மரணமும் தமிழக மக்கள் மனதில் நீங்கா வடுவாக மாறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகே உள்ள கல்வினை என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கொலையில் பல திருப்பங்கள் ஏற்பட்ட படியே உள்ளன.

முதலில் இந்த சிறுமி டிவி பார்ப்பது பிடிக்காமல்தான் முதீஸ்வரன் கழுத்தை நெரித்து கொலை செய்து அந்த கொலையை வெளியே தெரியாமல் இருப்பதற்காக டிரம்மில் போட்டு அடைத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்டு அந்த டிரம்மை விட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆனால் இதை முற்றிலுமாக அந்த சிறுமியின் பெற்றோர் மறுக்கின்றனர். ஈஸ்வரன் ஒரு கஞ்சா வியாபாரி போதையில் தன்னை வீட்டிலேயே பலாத்காரம் செய்து அதன் பிறகுதான் அவன் ட்ரம்மில் போட்டு அடைத்து வைத்துள்ளான் என்று கூறினார்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு சென்று வந்த பின்னர் மருத்துவர்களும் சிறுமி கழுத்தை நெரித்ததனால் தான் உயிரிழந்துள்ளார் என்றும் கூறினார். ஆனால் இதை மறுத்துள்ள பெற்றோர்கள் என் குழந்தையின் உதட்டிலும் உடம்பிலும் பல கடி வாங்கிய காயங்கள் உள்ளன. இதனால் இதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் சிறுமியின் கொலை வழக்கில் மர்மம் நீடித்து கொண்டே வருகிறது.