பொன்மகள் வந்தாள்.!! திரை விமர்சனம்..!!

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய தமிழ் சினிமாவில் தலை தூக்கி காண்பிக்கின்றன. அந்த வகையில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள்வந்தாள் படம் முதல் முறையாக OTT ல் ரிலீசானது.

படத்தை பற்றி விமர்சனம் இதோ..

கதைக்களம் ஊட்டியில், தொடர்ச்சியாக ஐந்து குழந்தைகள் கடத்தப்படுகின்றனர், அதோடு இரண்டு இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர். இந்தச் செய்தி அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைகோ பெண்தான் என்று போலீசார் அவரை கொள்கின்றனர்.

நீண்ட நாட்கள் கழித்து ஜோதி தவறு செய்யவில்லை, என்று பாக்யராஜ் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கவும், பாக்யராஜ் மகளாக ஜோதிகா இந்த கேஸ் ஒரு வக்கீலாக எடுத்து நடத்துகிறார். ஜோதிகாவுக்கும் ஜோதிக்கும் என்ன தொடர்பு,அவர் ஏன் இந்த கேசை எடுக்க வேண்டும், எடுத்த வழக்கை வெற்றிகரமாக முடித்தாரா, உண்மையில் ஜோதி தான் இந்த கொலை செய்தாரா? இல்லையா ?வேறு யார் செய்தார் என்ற கதையை பின்னணியாகக் கொண்டு இந்த படம் பயணிக்கிறது.

பொன்மகள் வந்தாள் படம் முதல் முறையாக ஊட்டியில் வெளிவரும் பெரிய தமிழ் படம் என்பதால், ரசிகர்கள் நேற்று படத்தை பார்த்து அதற்கான கருத்துக்களை கூறி வருகின்றனர். என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். ஜோதிகா அவருடைய டாப் 5 படங்களில் இதுவும் ஒன்றாக அமையும், மேலும் பார்த்திபன், நீதிபதியாக வரும் பிரதாப் என அனைவருமே அந்தந்த கதாபத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றனர்.

படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்ல.. யார் இந்த ஜோதி.. யார் இந்த கோரக் கொலைகள் எல்லாம் செய்தது. என்று காட்சிகள் சுவாரஸ்யமாக செல்ல அதற்கான விடைகள் மெல்ல மெல்ல இரண்டாம்பாதியில் வெளிவருவது ,இயக்குனரின் சாமர்த்தியம்.

கதைக்களம் இன்றைய சமூக சூழ்நிலையில் நாம் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இயக்குனர் பெட்ரிக் மிக அழுத்தமாக கூறியுள்ளார். இதற்கு பக்கபலமாக ராம்ஜி ஒளிப்பதிவு ஊட்டியை நம்மை உணர வைக்கிறார். அதோடு அந்த நீதிமன்ற காட்சிகளில் எடுத்த விதம் சூப்பர், இசை கதையின் உயிர் ஓட்டத்திற்கு உதவுகிறது.

நீதிமன்ற காட்சிகளில் பேசும் வசனங்களில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம், என்று சிலசமயம் தோன்றுகின்றது. பொன்மகள் வந்தால் ஜோதிகாவிற்கு வெற்றிப் படமே..