பேசாம வீட்லேயே சரக்கு கொடுத்துருங்க…! நீங்க அபாரதமா இவ்ளோ கொடுங்க..! நீதிமன்றம் அதிரடி..!

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு கொரானோ வைரஸ் பரவாமல் இருக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் மது கடைகளும் ஒன்று. இதனால் மது அடிமைகளும் மது பிரியர்களுக்கு மது கிடைக்காமல் வாடி வந்தனர்.

தமிழகத்திற்கு பெரும் வருவாயை ஈட்டி தரும் விற்பனைகளில் ஒன்று மது கடை, தற்போது ஊரடங்கு காரணமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் தமிழகம் மீண்டும் இழந்த பொருளாதாரத்தை மீட்க கடந்த மே 7 ஆம் தேதி, மது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மது பிரியர்கள் முந்தி அடித்து கொண்டு கூட்டம் கூட்டமாக சென்று மது கடைக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றதால் இரண்டே நாட்களிலே மது கடைகள் மீண்டும் மூட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசும் மேல் முறையீடு செய்த நிலையில், ஒருவர் ஆன்லைன் மூலம் வீட்டிற்கே மது விற்பனை செய்ய மனு கூறி இருந்தார். இதனால் அவருக்கு ரூ. 20000 நீதிமன்றம் அபராதமாக விதித்தது.