தமிழகத்தை ஆட்டிப்படைக்க வருகிறது ஆம்பன்…! வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி…!

தமிழகத்தை தற்போது கொரானோ ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று தமிழகம் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த உலகமே காத்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் அதிர்ச்சியை அறிவித்துள்ளது வானிலை மையம். வங்க கடலில் அந்தமான் தீவு பகுதி அருகே, புதிய காற்றுஅழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இதனால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகள் மிதமான மழை முதல் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றுஅழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றால் அதற்கு ஆம்பன் என பெயரிடப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரானாவால் பொருளாதார ரீதியாக மக்கள் இழப்பை சந்தித்துள்ள நிலையில் ஆம்பன் உருவாகிவிட கூடாது. என்பது மக்களின் வேண்டுதலாக இருந்து வருகிறது.