மதுரை அன்னவாசல் திட்டத்திற்கு ஒரு பெரிய தொகையை உதவியாக அளித்த சூர்யா..!

மதுரையில் உள்ள 6 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அன்னவாசல் என்ற திட்டம் மூலம் கொரானோ ஊரடங்கால் பாதிப்பட்டுள்ள 3 ,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.

மதுரையில் தனித்திருப்பவர்கள் மற்றும் உணவின்றி தவிப்பவர்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று உணவளிக்கும் இந்த திட்டம் மே 1 ஆம் தேதி முதல் “மாமதுரையின் அன்னவாசல்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை.