இன்று காதலர் தினம்…! இந்த வருட லேட்டஸ்ட் காதல் ஜோடிகள் இவர்கள் தான்…! இந்த வருடமாச்சும் கல்யாணம் பண்ணிடுவாங்களா…?

சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் நடிகைகள், நிஜ வாழ்க்கையில் எப்படி உள்ளனர் என்று ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும், அதுபோல திருமணம் காதல் திருமணமா அல்லது வரன் பார்த்து திருமணமா என்ற கேள்வியும் அனைவர் மனத்திலும் எழும்.

அதுபோல இன்று காதலர் தினம், தற்போது உள்ள நட்சத்திரங்களில் சிலர் காதல் ஜோடிகளாக திகழ்கின்றனர், அதில் மிகவும் முக்கிய பிரபலம் என்றால் அது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தான், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் காத்துகொண்டுஇருக்கின்றனர்.

அதுபோல முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா பவனி ஷங்கரும் அவருடைய கல்லூரி நண்பர் ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது இவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதுபோல கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற ஒரு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடிப்பவர் மடோனா செபாஸ்டின் ஐவரும் மலையாள இசையமைப்பாளர் ரோபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருகிறார்.