நெஞ்சின் மேல் காதல் பலூனை வைத்துக்கொண்டு மிகவும் ரொமான்டிக்காக புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி…!

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டு மிகவும் டீசெண்டாக பழகி வந்தவர் சாக்ஷி. இவர் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு முன்பு பேட்ட, விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர்கள் ரசிகர் கூட்டம் அதிகரிக்க இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

ஆனால் வந்த வேலையை பார்க்காமல் கவினுடன் காதல் என்று சுற்றி திரிந்து, பின் ஒரு சிறிய சாக்லட் பிரச்சனையால் இருவரின் காதல் முறிந்து, ஒரு சிறிய கெட்ட பெயரை வாங்கி கொண்டார். அதன்பிறகு இந்த நிகழ்ச்சியில் மக்களால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஓர் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல காதலர் தினத்தை முன்னிட்டு கையில் காதல் பலூனை பிடித்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.