வீட்டில் வந்த கொள்ளையனை சாமர்த்தியமாக விரட்டி அடித்த பெண்…! என்ன சொல்லி விரட்டி அடித்தார் தெரியுமா…?

சீனாவில் கொள்ளையடிக்கும் நோக்கோடு வீட்டுக்குள் வந்த கொள்ளையனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் போலீஸார் கைது செய்துள்ளனர். சிங் ஷான் எனும் நகரில் கடந்த வாரம் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வாலிபன் ஒருவன் வந்துள்ளான்.

வீட்டை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது படுக்கையில் இளம்பெண்ணை பார்த்து தவறான எண்ணம் வந்துள்ளது. அப்பெண்ணை நெருங்கியதுடன் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

ஆனால் சாமர்த்தியமாக யோசித்த அப்பெண், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி பலமாக இருமியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வாலிபன் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளான்.

உடனடியாக போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை அப்பெண் விளக்கி கூற தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவனை கைது செய்துள்ளனர்.