பாலியல் துன்புறுத்தல் வழக்கு..! நீதி மன்றத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கொடுத்த வாக்குமூலம்…!

பிரபல திரைப்பட நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகை ரம்யா நம்பீசன் நேற்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். பல மொழி படங்களில் நடித்து வந்த முன்னனி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கொடுக்கப்பட்டது.

இதனால் இந்த சம்பவம் கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய நடிகர் திலீப்பை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். அதன் பின் திலிப் நிபந்தனை ஜாமின் செய்து வெளிவந்தார். இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இதற்கரக அந்த நடிகையின் நெருங்கிய தோழி நடிகை ரம்யா நம்பீசன் நீதிமன்றத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சாட்சிகளாக 136 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தினமும் ஒருவர் வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர்.