தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு சிறப்பம்சங்கள்..! மற்றும் அதன் விவரங்கள்..!

உலக புகழ் பெற்ற திருத்தளங்களில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்த கோயிலை ராஜராஜ சோழன் அவர் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டினார். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு இன்னுமொரு அடையாளம். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் தஞ்சை பெரிய கோயிலும் ஒன்று.

இத்தனை அம்சங்கள் நிறைந்த இத்திருக்கோயிலுக்கு 23 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறவில்லை. தற்போது இந்த திருக்கோயிலுக்கு ஏகப்பட்ட சவால்களை தாண்டி வருகிற பிப்ரவரி 5 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சுமார் 5 லட்சத்திற்கு மேல் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி

புறப்படும் இடம் நேரம் சேரும் இடம் நேரம்

திருச்சி 12 :00 பிற்பகல் தஞ்சாவூர் பிற்பகல் 13 .30
தஞ்சாவூர் 14 :00 பிற்பகல் திருச்சி மாலை 15 :30
தஞ்சாவூர் 9 :45 காலை மயிலாடுதுறை நண்பகல் 12 :00
மயிலாடுதுறை 15 :20 பிற்பகல் தஞ்சாவூர் மாலை 17 :30

இதுபோன்று காரைக்காலில் இருந்தும், திருவாரூரில் இருந்தும் தஞ்சாவூருக்கு சென்று வரவும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.