வெள்ளை யானை படத்தின் வெண்ணிலா பாடலை கேட்டுள்ளீர்களா…? கேட்பவரை மயக்கும் இசை…! இதுவல்லவா பாடல் என கேட்போரை முணுமுணுக்கவைக்கிறது…!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. இவர் தற்போது இயக்கியுள்ளபடம் தான் வெள்ளை யானை. இதில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

நடிகர் ஜீவா நடித்து வரும் ஜிப்ஸி, மற்றும் சந்தானம் நடித்து வரும் சர்வர் சுந்தரம் படத்திற்கும் இவர் தான் இசை அமைத்துவருகிறார். தற்போது வெள்ளையானை படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் கூடியசீக்கிரம் வெளிவர உள்ளன. இதில் வெண்ணிலா பாடல் தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வெண்ணிலா பாடலுக்கு உமாதேவி வரிகளில் விஜய் நரைன், மற்றும் சங்கீத ஆகிய இருவரின் கண்டா குரலில் வலியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படலாசிரியாக இயக்குனர் ராஜு முருகன் பணியாற்றியுள்ளார்.