தர்பார் திரைவிமர்சனம்..!

[wp_ad_camp_2]

பேட்ட திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தர்பார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

முதல் பாதி :

ஆதித்யா அருணாச்சலமாக சூப்பர்ஸ்டார் ரஜினி மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். ரஜினியை கண்டாலே மும்பையில் உள்ள அனைத்து தாதாக்களும் நடுங்குகின்றனர். அந்த அளவிற்கு தவறை தட்டி கேட்கும் ஆக்ரோஷ ஆதித்யா அருணாச்சலமாக ரஜினி வருகிறார். முதல் பாதியில் ரஜினியின் நடனம், ஆக்சன் காட்சிகள் வேற லெவெலில் இருக்கின்றது. நயன்தாரா, யோகி பாபு கதைக்கு தேவையான இடத்தில வந்து சென்றாலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பதே உண்மை. யோகி பாபுவின் கவுண்டர் வசனங்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது.

சும்மா கிழி பாடல் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட். முதல் பாதி முழுக்க வில்லன் கதாபாத்திரத்திற்கு வேலை இல்லை. ஆனாலும் யார் முக்கிய வில்லன் என்பதை இடைவேளையில் காட்டும் காட்சி ரசிக்கும்படி உள்ளது.

ரஜினியின் ஸ்டைல் மேலும் ஒருபடி தர்பாரில் அதிகமாகியுள்ளது முதல் பாதியை பொறுத்தவரையில் ஒரு இடத்தில்கூட சலிப்படைய செய்யவில்லை. படத்தின் மிகப்பெரிய பலமே முதல் பாதி என்று கூறலாம்.

இரண்டாம் பாதி:

யார் வில்லன் என்பது நன்றாக தெரிந்தும் அதை திரைக்கதை வடிவில் எப்படி எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்பதை நன்றாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிந்து வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ரயில் சண்டை காட்சி “சும்மா கிழி”. நிவேதா தாமஸ் இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு நன்றாக அழுத்தம் கொடுத்துள்ளார். வீடியோ காலில் பேசும் காட்சியில் கண்கலங்க வைத்துள்ளார் நிவேதா தாமஸ்.

வில்லனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். டப்பிங் கொஞ்சம் வில்லனிற்கு கொஞ்சம் மிஸ் ஆவது போல தோன்றுகிறது. படத்திற்கு தர்பார் பெயர் மிக சரியாக வைத்துள்ளனர். மும்பை தர்பார் என்றுகூட வைத்திருக்கலாம். கண்டிப்பாக தமிழை விட மும்பை ரசிகர்கள் ரசிக்கும்படி சில காட்சிகள் அமைக்க[பட்டுள்ளது.

இரண்டாம் பாதியை விட முதல் பாதி அதிகம் கவரும் வகையில் உள்ளது. இசை தர்பார் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த தர்பார் “சிவாஜி” படத்திற்கு பிறகு ரஜினிகாந்திற்கு ஒரு மிகப்பெரிய கமெர்சியல் வெற்றி திரைப்படம் எனலாம். பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திரைப்படம்.

ரேட்டிங் – 3 / 5