V1 திரை விமர்சனம்..!

[wp_ad_camp_2]

பாவல் நவகீதன் மெட்ராஸ் படத்தில் வில்லனாக விஜி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். பின் குற்றம் கடிதல் பேரன்பு ஆகிய படங்களில் நடித்த பாவல் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவரின் த்ரில்லரான கதைக்களம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பாப்போம்.

பாவல் நவகீதன் மெட்ராஸ் படத்தில் வில்லனாக விஜி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். பின் குற்றம் கடிதல் பேரன்பு ஆகிய படங்களில் நடித்த பாவல் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவரின் த்ரில்லரான கதைக்களம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பாப்போம்.

முதல் பாதி :

ராட்சசன் படத்தில் வருவதை போலவே தான் செய்த வேலையை உதறிவிட்டு தனக்கு ஆர்வமுள்ள வேலையை செய்கிறார் ஹீரோ ராம் அருண். திறமையான போலீஸ் அதிகாரியாக இருந்தும் துப்பறியும் அதிகாரியாக மாறுகிறார். ராம் அருணின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் கதைக்கான நாயகன் என்பதை நிரூபித்து தத்ரூபமாக நடித்துள்ளார். விஷ்ணு பிரியா ராமின் தோழியாக வருகிறார். விஷ்ணு பிரியாவிற்கு ஒரு கொலை வழக்கு வருகிறது. இதனை கையாள திறமையான போலீஸ் அதிகாரியான ராமின் உதவியை நாடுகிறார்.

ராமின் வாழ்க்கையில் விஷ்ணு பிரியா எப்படி வருகிறார். அதனால் என்ன பிரச்சனை நடக்கிறது. அதை எப்படி ராம் சமாளித்து பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார் என்பதுதான் இரண்டாம் பாதி. இரண்டாம் பாதியில் ராம் மற்றும் விஷ்ணு ப்ரியாவின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டுக்குரியது.
இசை கவரும் வகையில் உள்ளது. முதல் பாதி கதையை நோக்கி நகர்வதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதி :

காயத்திரியின் மரணத்தை விசாரிக்கும் ராமின் அடுத்தடுத்த நகர்வுகளை யூகிக்கமுடியாத அளவிற்கு இயக்குனர் திரைக்கதையை நகர்த்துவது கண்டிப்பாக பாராட்டுக்குரியது. V1 வழக்கில் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அதற்காக அடுத்தடுத்து ராம் செய்யும் விஷயங்கள் கண்டிப்பாக ரசிக்கும்படி உள்ளது. இதில் ராமின் வாழ்க்கையில் இழந்த திருப்பங்கள் எல்லாமே இரண்டாம் பாதியில் இயக்குனர் காட்டிய விதம் அசத்தல்.

முதல் பாதியில் இருக்கும் ட்விஸ்ட் மற்றும் திரைக்கதையின் ஸ்வாரஸ்ய நகர்வு இரண்டாம் பாத்தில் கொஞ்சம் மிஸ் ஆவது தெரிகிறது. இருந்தாலும் படத்தில் யார் அந்த கொலையாளி என்ற சஸ்பென்ஸ் படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. படத்தில் வரும் ஜாதி பற்றின விஷயங்கள் அனைத்துமே ரசிக்கும்படியே உள்ளது. ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் அறிமுக நாயகன் ராம்.

மொத்தத்தில் ஜாதி மத பேதமின்றி வாழ நினைக்கும் ஒரு சக மனிதனுக்கு சுவாரசியத்தை கூட்டி, ஜாதி வெறிபிடித்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியே இந்த “V1”. கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் திரைப்படம்.

ரேட்டிங் : 3.5 / 5