பிகில் திரை விமர்சனம்..!

[wp_ad_camp_2]

சர்காருக்கு அடுத்து விஜய் நடிப்பில் அனைவரின் எதிர்பார்ப்புடன் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று ரிலீசான திரைப்படம்தான் “பிகில்” இந்த படத்திற்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

விஜய், அட்லீ, ஏ,ஆர்.ரகுமான், நயன்தாரா என்று பிரம்மாண்ட கூட்டணியுடன் களத்தில் இறங்கிய பிகில் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

முதல் பாதி :

விஜயின் என்ட்ரி கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்தது. கதைக்களம் என்ன என்பதை இயக்குனர் முதல் பாதியிலேயே தெளிவாக கூறிவிட்டார். படத்தில் இரண்டு விஜய். தந்தையாக ராயப்பன் விஜயும், மகனாக பிகில் என்று அழைக்கப்படும் மைக்கல் விஜயும் வருகின்றனர். ராயப்பன் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. மைக்கல் விஜய் கண்டிப்பாக அழகான விஜயை அப்படியே காட்சி படுத்தியுள்ளது. விஜயின் நக்கல், நையாண்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். நயன்தாரா ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார். யோகி பாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார். கதிர் படத்திற்கு திருப்பு முனையாக வந்தாலும் அவ்வளவாக ஸ்கொர் செய்யவில்லை.

முதல் பாதி சற்று தொய்வாக நகர்ந்தாலும் விஜய் படத்தை தாங்கி பிடிக்கிறார். விஜய் ரசிகர்களை பொறுத்தவரையில் முதல் பாதி கண்டிப்பாக ஓகே என்றுதான் சொல்லவேண்டும். பொதுவான ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. கால்பந்து விளையாட்டு பி,சி சென்டர் ஆடியன்ஸிற்கு புரியும்படி அதன் விதிகளை கூறியிருக்கலாம்.

வெறித்தனம் பாடல் வெறித்தனமாக உள்ளது. பின்னணி இசை சற்று தொய்வாகவே உள்ளது.

இரண்டாம் பாதி :

படத்தின் கிளைமாக்ஸ் இதுதான் என்று தெரிந்தாலும் கண்டிப்பாக திரைக்கதையில் அட்லீ போரடிக்காமல் இரண்டாம் பாதியை நகர்த்திவிடுவார் என்று பார்த்தல் இரண்டாம் பாதியில் நான்கு கால்பந்தாட்ட போட்டியை வைத்து ரசிகர்களை சோதிக்கிறார். விஜய் அவரது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருந்தாலும் நயன்தாரா அவ்வப்போது தலைகாட்டி படத்தின் சுவாரசியத்தை குறைக்கிறார். சரி இதெல்லாம் பொறுத்து கொண்டாலும் லாஜிக்கே இல்லாத வில்லனாக வருகிறார் ஜாக்கி ஷெராப். ஆனால் சிங்கப்பெண்ணே பாடல் எல்லாவற்றையும் மறக்கடிக்க வைக்கிறது. படம் இப்போது முடியும் அப்போது முடியும் என்று பார்த்தால் முடிந்த பாடில்லை. இதுதான் நடக்க போகிறது என்று தெரிந்தாலும் சில காட்சிகளுக்கு வலு சேர்க்காமல் இருந்துள்ளார் இயக்குனர் அட்லீ.

பெண் போட்டியாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை சுமார் ரகமே.

விஜயின் நடிப்பு சூப்பர். நயன்தாரா கதாபாத்திரம் சேர்க்காமலேயே இருந்திருக்கலாம். விஜயுடன் கூடவே ரௌடிகளாக வரும் ஆனந்தராஜ் மற்றும் சக நடிகர்கள் எதற்காக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகி பாபு காமெடி ஓகே. இயக்கம், திரைக்கதை சொதப்பல்.

மொத்தத்தில் பிகில் சரவெடியாக வெடிக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்கு பிஜிலி வெடியாக வெடித்துள்ளது என்பதே உண்மை.

ரேட்டிங் – 2.5 / 5