Cinema

முதன்முறையாக பிக்பாஸ் ஷோவிற்கு பின் மற்றொரு போட்டியாளரின் வீட்டில் புகைப்படம் எடுத்துக்கொண்ட லொஸ்லியா..! யார் பாருங்க..!

பிக்பாஸ் போட்டி நிறைவு பெற்று மூன்று நாட்களாகிறது. இன்னும் பிக்பாஸ் ஷோவை பற்றியே சிலர் பேசிகொண்டுள்ளனர். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேலானால் சிலர் பிக்பாஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் முடிந்ததால் டிவி பார்ப்பதையே நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பிக்பாஸ் ஷோ ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது. பிக்பாஸ் போட்டியின் போது அனைவரும் ஒன்றாக இணைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். ஆனால் லாஸ்லியா மட்டும் பிக்பாஸ் முடிந்தும் எங்குமே தென்படவில்லை.

லாஸ்லியாவின் இணையப்பக்கத்திலும் ஒரு பதிவு கூட வெளியிட வில்லை. இதனால் லாஸ்லியா ரசிகர்கள் லாஸ்லியா இலங்கைக்கே சென்றுவிட்டார் என பதிவு செய்துவந்தனர். லாஸ்லியாவும் எதற்குமே பதிலளிக்காமல் இருந்துவந்தார். ஆனால் தற்போது அவர்களின் பதிவிற்கு முதல்முறையாக பதிலளிக்கும் விதமாக மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான பாத்திமா பாபு அவர்களை சந்தித்துள்ளார் லாஸ்லியா.

லாஸ்லியா ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதுவரை எங்கேயும் தலைகாட்டாத லாஸ்லியா பாத்திமா பாபு வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்றால் என்ன விஷயம் என்று தெரியவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts