அசுரன் திரை விமர்சனம்…!

[wp_ad_camp_2]

வடசென்னை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து நடிப்பு அரக்கனாக மாறிய தனுஷ் தற்போது அசுரன் படத்தின் மூலம் வெறித்தனமான நடிப்பை வெளியிட்டுள்ளார். சரி அசுரன் படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

முதல் பாதி :

தனுஷின் என்ட்ரி படு பயங்கரமாக பதட்டத்துடன் உள்ளது. தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். தனுஷின் மகனாக சிதம்பரம்(கருணாஸின் மகன் கென்) நடித்துள்ளார். இருவரும் பதுங்கி பதுங்கி வரும் முதல் காட்சி பார்ப்போருக்கு பரபரப்பை ஏற்படுத்திக்கிறது. ஏன் எதற்காக என்பதற்கு பிளாஷ்பாக் காட்சி வருகிறது. தனுஷின் மனைவியாக மஞ்சு வாரியர் வருகிறார். தனுஷிற்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்தமகன் டீஜே இளைய மகன் கருணாஸின் மகனான கென்.

தனுஷ் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து மஞ்சு வாரியாரின் அண்ணணாக வருகிறார் பசுபதி. தனுஷ் ஒரு சாதுவான, விட்டு கொடுக்கும் குணம் கொண்டவராக வருகிறார். வில்லனாக மிரட்டுகிறார் ஆடுகளம் நரேன். படத்தின் கதை கரு நிலத்தை தர மறுக்கும் தனுஷிரிடமிருந்து நிலத்தை பெறுவதற்காக அவரது மூத்த மகனை கொல்கின்றனர். அதன்பின் தனுஷ் அவர்களை பழி வாங்கினாரா..? இல்லை அந்த இடத்தை விட்டு வேறு நகரத்திற்கு இடம் பெயர்கிறாரா..? என்பதுதான் மீதி கதை.

தனுஷின் நடிப்பு ஆக்ரோஷமாக இருக்கிறது. ஹீரோயின் மஞ்சு வாரியார் தன் பங்கிற்கு நன்றாக நடித்துள்ளார். படத்தில் கென்(கருணாஸின் மகன்) நடிப்பு பெரிதும் பேசப்படும்.

முதல் பாதியில் இசை வேற லெவல். தனுஷின் நடிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை.

டீஜெ அருணாசலத்தின் நடிப்பு நன்றாக இருந்தாலும் அவர் வில்லனை எதிர்க்கும் காட்சிகள் கவரவில்லை

இரண்டாம் பாதி :

இரண்டாம் பாதியில் தனுஷின் பழிவாங்கும் காட்சிகள் வெறித்தனமாக உள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாமல் திரைக்கதை நகர்கிறது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். சண்டை காட்சிகள் ஆக்ரோஷத்தை ஏற்படுத்துகிறது. மேல் ஜாதி கீழ் ஜாதி அடித்தட்டு மக்களின் நிலையை சூழ்நிலைக்கு ஏற்றார் போல படமாக காட்சிப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன்.

இரண்டாம் பாதி முழுவதுமே சண்டை காட்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

படத்தின் பிளஸ் ஜிவி பிரகாஷ் குமாரின் இசை.

தனுஷின் நடிப்பு. வெற்றிமாறனின் எதார்த்த திரைக்கதை.

ஆனால் படத்தில் சில பல குறைகள் இருந்தாலும், படத்தின் திரைக்கதை அதனை மாற்றியுள்ளது.

மொத்தத்தில் அசுரன் திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட். பொதுவான ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம்.

ரேட்டிங் – 3.5 / 5