சிதம்பரத்தை அடுத்த பள்ளி ஆசிரியர் ஒருவர் காலையில் வித்தியாரம்பம் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு சென்றுவிட்டு தன் வீடு திரும்பியுள்ளார். அவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் வீட்டில் தனியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற ஆசிரியை மாணவியை வந்து கதவைத் திறக்குமாறு கேட்டுள்ளார். மாணவி மிகவும் பதற்றத்துடன் வந்து கதவை திறந்துள்ளார். அவள் பதட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு படுக்கையறைக்குள் ஒருவர் இருப்பதாக காட்டி உள்ளார்.
பூட்டியிருந்த வீட்டுக்குள் யார் வந்தது என்று விஅச்சத்துடன் அவள் படுக்கை அறையை திறந்து பார்த்த பொழுது படுக்கை அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மகளின் அறைக்குள் இருப்பது யார் என்று அச்சத்துடன் குழப்பத்துடன் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு அழைத்து வந்த ஆசிரியை, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்துள்ளன. ர் விரைந்து வந்த போலீசார் படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது ,அங்கிருந்த ஒரு மர்ம நபர் குளியலறைக்குள் சென்று உள்புறமாக தாளிட்டுக் கொண்டான்.
போலீசார் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு அவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். விசாரிக்கையில் அவன் விருத்தாச்சலம் பெரிய கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவன் ஜெயக்குமார் . இவன் கடந்த 6 மாதமாக இந்த மாணவியிடம் இன்ஸ்டகிரம் மூலம் பழகியுள்ளார். இந்த மாணவியை அவரது ஆசை வார்த்தைகள் பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
மனம் விட்டுப் பேச வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாணவியை வீட்டிற்கு சென்று சீரழித்து உள்ளான். மேலும் இதனை வீடியோவாகவும் தனது செல்போனில் பதிவு இட்டு தொடர்ந்து அந்த மாணவியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் தனது தாய் வீட்டில் இல்லாததை மாணவி தெரிவித்ததும் மீண்டும் வீட்டிற்கு வந்து அத்துமீறி உள்ளான் அந்த நயவஞ்சகன். அதற்குள் பள்ளி ஆசிரியை வீடு திரும்பவே இந்த கொடிய குணம் உடைய ஜெய குமார் கையும் களவுமாக சிக்கியுள்ளான். ஜெயக்குமாரின் செல்போனை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போதுதான் தெரியவந்தது ஜெயக்குமார் இதுபோல பல பெண்களிடம் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலமாக பல பெண்களை தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். மேலும் அந்த பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி ஆசை வார்த்தைகளை கூறி அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுத்தும், போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.