வறுமையிலும் எப்படியாவது சாதிக்கவேண்டும் முனைப்புடன் மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறிசொல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 500 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளா. ர்
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் படிப்பில் அதிக ஈடுபாடுடன் இருந்ததால் திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளதாக கூறுகின்றனர். இந்த பெண்மணி கூறுகையில் என் சமூகத்தில் பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பது என்பது மிகவும் அரிதான விஷயம், நான் ஒரு தொடக்கமாக இருக்கவே விரும்புகிறேன், நான் பிகாம் படிக்கப் போகிறேன், வங்கியில் வேலை செய்வது எனது மிகப்பெரிய கனவு, என் சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்கிறார் இந்த பெண். இந்த பெண்ணின் பெயர் தெய்வானை.
மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சுமார் 50 குடும்பங்களில் ஒருவராக வசித்து வருகிறார். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிக்காமல் பயணம் செய்துகொண்டே இருப்பார்கள், அல்லது சில மாதங்கள் மட்டும் ஓரிடத்தில் தங்கும் தங்கும் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
தெய்வானையின் பள்ளி தேர்ச்சி குறித்து பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாணவியின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக் கொள்ளப் போவதாக பிபிசி தமிழ் செய்தியிடம்
தெரிவித்துள்ளா. ர் இதை போன்ற பெண் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். மாணவியின் கல்லூரி செலவை நான் செலுத்துவதோடு அவருக்கு மேலும் பல உதவிகள் செய்ய அந்த மாணவியின் பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி வைக்க உள்ளேன். அவரை வெற்றியாளராக பார்க்க அவர் சமூகத்தோடு நான் காத்திருக்கிறேன், என்று கூறியுள்ளார் சரவணன்.