கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 1000 ரூபாய் வழங்குவதாக அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து நேற்று முதல் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. 1000 ரூபாய் மற்றும் அரசு தரும் பொருட்களை வாங்க டோக்கன் கொடுத்ததும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. கொரோனா பரவி கொண்டு இருக்கும் இந்த நிலையில் கூட்டம் கூடினால் மக்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது .
ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் ரேஷன் கடையில் 1000 ரூபாய் மற்றும் அரசு தரும் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வருகின்ற 7 ஆம் தேதி முதல் ரேஷன் கடையில் அரசு தரும் நிவாரண பொருட்கள் மட்டும் கிடைக்கும். இந்த பொருட்களை மக்கள் வாங்கி கோலா டோக்கன் ஒன்று வீடு வீடாக வந்து கொடுக்கப்படும் அப்போதே அரசு அறிவித்த 1000 ரூபாய் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.