தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள செட்டி பள்ளியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ரம்யா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டா ரெட்டி ரமேஷ் என்பவருக்கும் ரம்யாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சில நாட்களில் ரமேஷின் தந்தை சகோதர, சகோதரி, ஆகியோர் அவருக்கு பல்வேறு சித்திரவதை செய்துள்ளனர், இதன் உச்சகட்டமாக கணவர் தன் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ரம்யாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 2010 ஆண்டுகள் ரம்யாவிற்கு ராஜேஷிற்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுள்ளது பிறகு ரம்யாவின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
விவாதத்துக்கான பின் கல்வியை தொடர மீண்டும் ரம்யா கல்லூரி சென்று உள்ளார். அவ்வப்போது சிலருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் மீண்டும் அவள் சின்னாபின்னமாகி உள்ளார். இந்த நிலையில் மாணவர் அமைப்பு சேர்ந்த சுமன் ஆஞ்சநேயலு, பாலு, ஜிம் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ், சென்னையை சேர்ந்த சதீஷ், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், முகேஷ், தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோஷ் ராவ், பெங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார் ரம்யா.
இந்த நிலையில் அவரை அறையில் தன்னை அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்ததாகவும் இதன் மூலம் அந்த பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்து அதனை பல நண்பர்களுக்கு பகிர்ந்து அதன் மூலம் அவர்களையும் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தனர் என்றும் தனது புகாரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ரம்யா.
கடந்த பத்தாண்டுகளில் 140 க்கும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ரம்யா அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை அனுபவித்ததாகக் கூறும் இளம்பெண் காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஏறியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.