NGK திரை விமர்சனம்..!



சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த NGK திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. NGK திரைப்படம் ஒரு அரசியல் கலந்து ஆக்க்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

முதல் பாதி :

முதல் பாதியை பொறுத்தவரை சூர்யா மாஸ் இண்ட்ரோவில் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சூர்யா ஒரு சாதாரண மனிதர் போலவே என்ட்ரி ஆகிறார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்.

படித்துவிட்டு விவசாயம் செய்ய நினைக்கும் சூர்யாவிற்கு பல தடைகள் வருகிறது. அதன் பின் ஒரு MLA உதவி கேட்கிறார். அந்த MLA சூர்யாவை அரசியலில் இறக்கிவிட சூர்யாவும் அரசியலில் இறங்கி பதம் பார்த்து ஜெயிக்கலாம் என்று நினைத்து வருகிறார்.

அதன் பின் சூர்யாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிறது. எப்படி ஒரு படித்த இளைஞன் அரசியல்வாதியாக மாறுகிறார் என்பதுதான் முதல் பாதி முடிவில் நகருகிறது.


முதல் பாதி சூர்யாவின் நடிப்பு அவரது ரசிகர்களை வெறியேற்றுகிறது, அப்படி ஒரு மாஸ். சாய்பல்லவி சுமாராக நடித்திருக்கிறார். பாடல்கள் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. முதல் பாதி கண்டிப்பாக பார்க்கக்கூடியது என்று கூறலாம். அதுவும் இடைவேளை சமயத்தில் படம் கொஞ்சம் சுவாரஸியமாக இருக்கின்றது 

 

இரண்டாம் பாதி :

இரண்டாம் பாதியில் NGK அரசியலில் வெற்றிபெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் கதை. ஆனாலும் இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் ஒரு முடிவே தெரியாத அளவுக்கு தொடர்கிறது இது சூர்யா அல்லாமல் பொதுவான ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் .

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய சறுக்கல் என்றே கூறலாம். ராகுல் ப்ரீத் சிங் ,சாய்பல்லவி இருவரும் தங்களது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். 

செல்வராகவன் டச் படத்தில் அங்கங்கே இருந்தாலும், படத்தை ரசிக்கும் அளவிற்கு இல்லை. 


கதாநாயகிகளாக வரும் ராகுல் ப்ரீத் சிங் , சாய் பல்லவி நன்றாக நடித்துள்ளனர்.

இன்னும் 5 வருடங்கள் கழித்து பார்த்தாலும் இதே சாயலில்தான் இருக்கும், ஏனென்றால் இதே மாதிரியான கதையை இதற்குமுன் பல படங்களில் எடுத்துள்ளனர். 

படத்திற்கு பலமாக இசை இருந்தாலும் திரைக்கதையோடு ஒட்டவில்லையோ என்று யோசிக்கவைக்கிறது. 


இரண்டாம் பாதியில் படம் எதை நோக்கி நகருகின்றது என்பது எல்லோருக்கும் குழப்பம்.


படத்தின் மிகப்பெரிய பலமே சூர்யாதான்.


மொத்தத்தில் NGK ஒரு முறை ரசிக்கலாம் அதுவும் சூர்யாவின் ரசிகராக இருந்தால் மட்டுமே. மற்றபடி ஏமாற்றமே. 


ரேட்டிங் : 2.5  / 5